Tuesday, July 23, 2013

நடிகை மஞ்சுளா மறைவு!

 நடிகை மஞ்சுளா மரணம்
நடிகை மஞ்சுளா சிகிச்சை பலனின்றி சென்னையில் மரணம் அடைந்தார்.
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி

 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆருடன் நாயகியாக நடிக்க வேண்டும் என்கிற கனவில் இருந்தார். வளர்ந்ததும், ரிக்‌ஷாக்காரனில் எம்.ஜி.ஆருடன் நடித்தார்.
1969ல் சந்தி நிலையம் திரைப்படம் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான மஞ்சுளா எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகுமார் உள்ளிட்டோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கு திரையுலகிலும் பிரபல கதாநாயகியாக திகழ்ந்தார்.
 

கடலோரம் வீசிய காற்று குளிராக இருந்தது நேற்று, அழகிய தமிழ் மகள் இவள், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என ரிக்‌ஷாக்காரன், நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல் ஆகிய படங்களில் இவர் நடித்த பாடல்கள் மிக பிரபலம். கதாநாயகி தவிர ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரை மணந்த இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 
 

 சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
மஞ்சுளாவின் இறப்பு செய்தி அறிந்ததும் திரைத்துறையினர் அவருக்கு அஞ்சலி செலுத்த புறப்பட்டுள்ளனர்.

நடிகை மஞ்சுளாவுக்கு குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி ( படங்கள் )
நடிகை மஞ்சுளா( வயது 60) இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.  சென்னையில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 



 நடிகை மஞ்சுளா மறைவு! ஒய்.ஜி.மகேந்திரன், பிரபு, மீனா, மனோபாலா அஞ்சலி! 

 

விஜயகுமாரை கட்டி அழுத சரத்: ராதிகா, ராதாரவி, பூர்ணிமா, சங்கீதா அஞ்சலி

 விஜயகுமாருக்கு விஜயகாந்த், பிரேமலதா ஆறுதல்! 
 



நடிகை மஞ்சுளா மறைவு! திரையுலகம் அஞ்சலி, குடும்பத்தினருக்கு ஆறுதல்! 
 


நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி நடிகர் அருண் விஜய் கூறியதாவது:- மஞ்சுளா சித்திக்கு வயிற்றில் அடிபட்டதில் ரத்தம் உறைந்திருக்கிறது. அதை அகற்றுவதற்காக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மற்ற உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment