Tuesday, July 23, 2013

உங்கள் சிம் காட்டால் ஆபத்து!


பல மில்லியன் கணக்கான மக்கள் பாவிக்கும், மோபைல் போன் சிம் காட்டால் அவர்களுக்கு ஆபத்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டில் உள்ள நபர் ஒருவரே இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் அரை பில்லியன் சிம் காட்டுகள் பாதுகாப்பு குறைவாகக் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். அந்த சிம் காட்டுகளை நீங்கள் பாவிப்பவர்களாக இருந்தால், நீங்கள் எந்த போனைப் பாவித்தாலும் அதில் வைரஸைப் புகுத்தமுடியும் என்றும் அவர் கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக நீங்கள் விலையுயர்ந்த போனைப் பாவித்தால் கூட அதனுள் வைரஸை புகுத்த முடியுமாம். வைரஸ் என்றதும் , நாம் நினைப்போம் நாம் தரவிறக்கம்(டவுன்லோட்) செய்தல் தான் வைரஸ் வரும் என்று. ஆனால் இது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும்.

அதாவது வைரஸை அனுப்ப நினைக்கும் குற்றவாளிகள் ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினால் போதும். எஸ்.எம்.எஸ் உடன் வைரஸை அனுப்பினால், அது குறிப்பிட்ட சிம் காட் ஊடாகச் சென்று மோபைல் போனைத் தாக்குமாம். இவ்வகையான வைரஸை எப்படி அனுப்புவது என்பது பல குற்றவாளிகளுக்கு தெரியும் என்றும் பலர் கூறுகிறார்கள். இதனால் பலர் பாதிப்படையக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பலரது சிம் காட் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், சராசரியாக 8 பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவராவது இவ்வகையான சிம் காட்டையே பயன்படுத்துகிறார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே வித்தியாசமான எஸ்.எம்.எஸ் வந்தால் அதனை திறக்கவேண்டாம் என்றும் , அதில் உள்ள லிங்கை அழுத்தி வேறு இணையத்துக்கு செல்லவேண்டாம் என்றும் ஜேர்மன் ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment