Thursday, July 18, 2013

பிரபல கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்





பிரபல கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்

கவிஞர் வாலி

பிறப்பு டி. எஸ். ரங்கராஜன்
அக்டோபர் 29, 1931
இந்தியாவின் கொடி திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு,

இறப்பு சூலை 18, 2013 (அகவை 81)
சென்னை

பிரபல கவிஞர் வாலி சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
("தாயில்லாமல் நானில்லை" - அடிமைப்பெண்
"அம்மா அம்மா எந்தன் ஆருயிரே" - உழைப்பாளி
"நானாக நானில்லை தாயே " - தூங்காதே தம்பி தூங்காதே
"சின்னத்தாயவள் தந்த ராசாவே " -தளபதி "ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா" - வியாபாரி "காலையில் தினமும் கண் விழித்தால் " - நியூ)
10.000 ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலிபக் கவிஞருக்கு எனது ஆழந்த இரங்கல் (மூன்று தலைமுறை கண்ட நாயகன் நீங்கள்)
அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று அழ வைக்கும் வாலியின் பேனா,
முக்காலா முக்காபுலா என்று ஆடவும் வைக்கும்..

கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர் என்று சொல்லுக்கு அடையாளம் தந்தவர் வாலி..

ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment