Thursday, July 11, 2013

பின்லேடன் காரை மறித்த பொலிசார் !


அமெரிக்காவால் கடுமையாகத் தேடப்பட்டு வந்த பின்லேடனை, ஒருகாலத்தில் பாக்கிஸ்தானில் வைத்து பொலிசார் மறித்துள்ளார்கள். 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடைபெற்று சில நாட்களில் பாக்கிஸ்தானில் உள்ள வீதி ஒன்றில் படுவேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மறித்துள்ளார்கள். அதில் தனது மெய்ப்பாதுகாப்பளர் ஒருவருடனும், தனது கடைசி மனைவியோடும் பின்லேடன் பயணித்திருக்கிறார். பொலிசார் காரை மறித்த உடனே வெளியே இறங்கிச் சென்ற பின்லேடன், அவர்களுடன் ஏதோ பேசியிருக்கிறார். அதனையடுத்து அவரைப் பொலிசார் விட்டுவிட்டார்கள். ஆனால் அதற்கு முன்னதாக, பொலிசார் தமது தலைமையகத்தோடு பேசி இருக்கிறார்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பெயரிலேயே பின்லேடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாக்கிஸ்தானின் உளவு நிறுவனம் இத்தகவலைச் சேமித்து வைத்துள்ளது. ஆனால் அதனை எவரோ திருடி அல்ஜசீரா தோலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டார்கள். இதனால் பல சென்சிட்டிவான தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது. 2011ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினர், பின்லேடனின் வீட்டை சுற்றிவளைத்து தாக்கினர். இதில் அவர் கொல்லப்பட்டார். ஆனால் அவ்விடத்துக்கு அமெரிக்காவின் 3 உலங்கு வானூர்திகள் சென்றது. அவை அனைத்துமே குறைவான ஒலியை எழுப்பும் வானூர்திகள் ஆகும். ஓசாமா பின்லேடனின் மனைவி ஒருவர், பாக்கிஸ்தான் உளவுப் பிரிவுக்கு ஒரு விடையத்தை குறிப்பிட்டுள்ளார். சம்பவ தினத்தன்று, எமக்கு ஒரு ஒலி கேட்டது ஆனால் அது அடை மழைக்கு முன்னர் வரும் காறுப் போல இருந்தது. அதனால் நாம் அதனை பெரிதுபடுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

மற்றும் இக் கொலைதொடர்பாக பாக்கிஸ்தான் என்ன நினைக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்கா பின்லேடனைக் கொன்றது ஒரு கொலை என்றும் அதனை மன்னிக்கமுடியாது என்றும் பாக்கிஸ்தான் கருதுகிறது. ஓசாமா பின்லேடனைக் கொலைசெய்ய அமெரிக்காவுக்கு உதவிய ஷகீல் அல்பிரேடி என்னும் மருத்துவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது பாக்கிஸ்தான் நீதிமன்றம். அதாவது மருத்துவர் ஷகீல் பாக்கிஸ்தான் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதே, குற்றச்சாட்டாகும். ஆனால் இதில் ஒரு சுவாரசியமான விடையமும் உள்ளது. அமெரிக்கா நினைத்திருந்தால், மருத்துவர் ஷகீலையும் பாக்கிஸ்தானில் இருந்து வெளியே கொண்டுசென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. போதாக்குறைக்கு தமக்கு, தகவல் தந்தவர் இவர்தான் என்றுகூறி அவரையும் மாட்டிவிட்டார்கள். அது தான் ஏன் என்று இதுவரை தெரியவில்லை.



No comments:

Post a Comment