Saturday, June 29, 2013

இனி நீங்கள் தொலைக்க மாட்டீர்கள்!



இனி நீங்கள் தொலைத்த திறப்பைத் தேடி வீட்டில் அலையத் தேவையில்லை. கிரெடிட் காட் வாலட், பேர்ஸ், கை-பை எதனையும் தேடி அலையத்தேவையில்லை. காரணம வந்து விட்டது "டைல்" ! இது ஒரு சிறிய பிளாஸ்டிக் ஆகும். மிகவும் மெல்லிய மற்றும் சிறிய ராக பெட்டி வடிவில் இது அமைந்துள்ளது. இதில் சுமார் பல வருடங்களுக்கு இயக்கக்கூடிய பேட்டரிகள் உள்ளது. மற்றும் புளூ -ரூத் அலைகளை அது வெளியிடக் கூடியது. இந்த "டைல்" என்னும் பிளாஸ்டிக் துண்டை உங்கள் திறப்பு இல்லையென்றால் கை-பை அல்லது சைக்கிள் எதிலாவது நீங்கள் போட்டு விடலாம். பின்னர் அதனைக் காணவில்லை என்றால், இல்லை என்றால் மறந்து எங்காவது விட்டிருந்தால், அதனைக் கண்டு பிடிப்பது ரெம்ப சிம்பிள். உங்கள் ஸ்மாட் போனில் ஒரு அப்பிளிக்கேஷனை டவுன்லோட் செய்தால் போது, உங்கள் மோபைல் போன் திரையில், நீங்கள் தொலைத்த பொருள் எங்கே இருக்கிறது ? எத்தனை அடி தூரத்தில் இருக்கிறது என்பதனைக் காணலாம்.

சுமார் 150 அடி தூரம் வரைக்கும் இது வேலைசெய்யும். குறிப்பாக சிறுவர்கள்(உங்கள் பிள்ளைகளின்) கால்சட்டை பாக்கெட்டில் கூட நீங்கள் இதனைப் போட்டு விடலாம். நீங்கள் சன நடமாட்டம் அதிகம் உள்ள இடம் சென்றால் கூட , உங்கள் பிள்ளைகள் அருகில் தான் இருக்கிறார்களா என்று உங்களால் கண்காணிக்க முடியும். இதில் பிரத்தியேகமான விடையம் ஒன்றும் உள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு சைக்கிள் அல்லது லாப்-டொப்பின் பாக்கில் இதனை இணைத்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளும்வோம். ஆனால் உங்கள் லாப் -டொப்பை யாரோ களவாடிவிட்டார்கள். அவர்கள் 150 அடி தூரத்துக்கு மேல் போய் விட்டால் கூட உங்கள் மோபைல் போனில் உள்ள அப்பிளிகேஷன் அதனை தொடர்ந்து தேடியவண்ணமே இருக்கும். தற்செயலாக நீங்கள் திருடிய நபருக்கு அருகில் 2 நாட்கள் கழித்துச் சென்றாலும் உங்கள் மோபைல் போன் அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்.

மிகவும் குறைந்த விலையில் சந்தைக்கு வரவிருக்கும் "டைல்" சாதனத்தை பல மில்லியன் கணக்கான மக்கள் வாங்கிப் பாவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரத்தியேகமான விடையம் என்னவென்றால், 150 அடி தூரம் வரை இது வேலைசெய்வதும், மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட பற்றரிகளும் தான்.



No comments:

Post a Comment