Friday, June 28, 2013

ஒரு கல் குவாரியை இப்படி ?

சீனாவின் சொங்ஜியாங் மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கற்சுரங்கமொன்றில்(கல் குவாரி) 345 மில்லியன் பவுண்ஸ் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இத்திட்டம் தொடர்பான வரைபடம் மற்றும் படங்கள் பார்ப்போரை நிச்சயம் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட அட்கிண்ஸ் நிறுவனமே இதனை வடிவமைத்துள்ளது. தற்போது நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 19 இற்கும் மேற்பட்ட மாடிகளையும் 380 அறைகளையும் கொண்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது. 

இரு மாடிகள் நீருக்கு அடியில் அமைக்கப்படவுள்ளது. மலையைக்குடைந்து அமைக்கப்படும் இவ்ஹோட்டலை நிர்மாணித்து முடிக்க 3 வருடங்கள் ஆகுமென கணிக்கப்பட்டுள்ளது. பாழடைந்த கல் குவரி ஒன்றை இவ்வாறு செய்யமுடியுமா என பலரும் அதிசயத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.







No comments:

Post a Comment