Saturday, June 15, 2013

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் காலமானார்!


இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் காலமானார்..தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத மனிதராக திகழ்ந்தவர்...நல்ல படிப்பாளி! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59)  மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.
நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.
அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில், 'பாலைவன ரோஜாக்கள்' என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.
இதுவரை ஈழத் தமிழருக்காக குரல்கொடுத்து வந்த தலைமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழினம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment