Saturday, June 1, 2013

மிஸ் யுனிவர்ஸ் கனடா தெரிவில் தவறு ஏற்பட்டதினால் அழகியிடம் பட்டம் மறுநாள் பறிப்பு !


ஒடாவா: 2013ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் கனடா போட்டியில் டெனிஸ் காரிடோ என்பவர் வெற்றி பெற்றதாக கடந்தசனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தவறுதலாக டெனிஸ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதாக மறுநாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்டாரியோ பிரான்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் டெனிஸ் காரிடோ(26). அவர் கடந்த 2008ம் ஆண்டில் மிஸ் எர்த் கனடா அழகிப் பட்டமும், 2010ம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு கனடா பட்டமும் வென்றார். இதையடுத்து மிஸ் யூனிவர்ஸ் கனடா அழகிப் பட்டம் வெல்வதை தனது லட்சியமாக வைத்திருந்தார். அதன்படி மிஸ் யூனிவர்ஸ் கனடா அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்று நடந்தது.
denise1
இறுதிச் சுற்றின் முடிவில் டெனிஸ் காரிடோ மிஸ் யுனிவர்ஸ் கனடாவாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கிரீடமும் அணிவிக்கப்பட்டது. தனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார் டெனிஸ்
மறுநாள் மிஸ் யுனிவர்ஸ் கனடா போட்டியை நடத்திய டைரக்டர் டெனிஸிடம் மதிப்பெண்களை கூட்டி கம்ப்யூட்டரில் ஏற்றுகையில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் 4வது இடத்தை தான் பிடித்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அன்றே பட்டத்தை திரும்பப் பெற்றனர்.
டெனிஸிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பட்டம் உண்மையான வெற்றியாளர் ரீஸா சான்டோஸுக்கு(26) வழங்கப்பட்டது.
riza-santosriza-santos


No comments:

Post a Comment