Friday, June 7, 2013

66 வருடமாக பெண்-ஆணாக வாழ்ந்துள்ளார் !

ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் 66 வயதான ஆதரவற்ற ஒருவர், தன்னுடைய வயிறு பெருத்து வருவது குறித்து சந்தேகப்பட்டு மருத்துவரிடம் சென்றார். பரிசோதனையின் போது பெண்ணுக்கு அமைந்திருக்கும் கருப்பை அவருக்கும் உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். கருப்பையில் கட்டி வளர்ந்ததால் அவரது வயிறு பெரிதாக மாறியது தெரிய வந்தது.

அவருக்கு இரண்டு மரபணுக்களும் இணைந்து காணப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இதுபோன்று மொத்தம் ஆறு பேர் தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண்களுக்குரிய டர்னர் என்ற நோய்க்குறி இருந்ததால் அவருக்கு குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டு கருப்பை சிறியதாக மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டது. எனினும் சிறுநீரகச் சுரப்பி பெரியதாகவும், ஆணுக்குரிய ஹார்மோன்களும் இருந்ததால் தாடி வளர்ச்சியும், சிறிய ஆண் குறியும் இருந்துள்ளது. அதனால் இதுவரை அவரை ஆண் மகனாகக் காட்டியுள்ளது.

இந்தக் கட்டி வந்திருக்காவிட்டால், அவரின் புதிரான இந்த உடலமைப்பு வெளியில் தெரிந்திருக்காது என்று திங்கள் அன்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலகில் முதல் முதல் தோன்றிய உயிரினங்களில் பல ஆண் மற்றும் பெண் ஒன்றான உயிரினமாகவே தோன்றியது. தற்காலத்தில் உள்ள மனித இனம் கூட ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒன்றாகவே உள்ளனர். ஆண்குறி பெண் குறி மற்றும் மார்பு போன்ற சிறு விடையங்களால் தான் நாம் மாறுபட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியட்நாமில் பிறந்த அந்த சீன தேசத்தவர், ஆணுக்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு தொடர்ந்து ஆணாகவே இருக்கப் போவதாக மருத்துவ பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment