Saturday, May 25, 2013

தமிழர் மனங்களை என்றுமே ஆட்டிவைத்த TMS இன்று இறைவனை பாடி மகிழ்விக்க சென்றுவிட்டார்!


என்றுமே அழியாத அவர் புகழ் சொல்ல வார்த்தைகள் இல்லை,எனது தாத்தா தொடக்கம் எனது பேரன் வரை இன்றும் ஆட்டிவைக்கும் அவர் பாடல்கள் பத்தாயிரமாம்!அவர் எம்மை வாழ வைத்தார் கண்ணதாசன் வரியாக மக்கள் திலகம்,நடிகர்திலகம்,நவரசத்திலகம்,மக்கள்கலைஞர்,நகைச்சுவை மன்னன்..... குரலாக!!சொந்தமாகவும் பட்டினத்தார் ,அருணகிரிநாதராக நடித்தும் காட்டினார்!!அவரை ஓரம் போ என்று சொன்னவர்கள் கலைக்கும் கலையரசிக்கும் எதிரிகளே!!அவரை இறைவன் அழைத்துக்கொண்டான் அவர் இசைக்கு தான் நடனமாட!!நமக்கு காதுகளை புண்ணாக்கும் இசைதான் கடவுள் தந்த தண்டனை சிறந்த கலைஞனை மறந்தமைக்கு!!சூப்பர் சிங்கர் போதுமே கலையை கலைக்க!!
'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் ...'..ஈழப்போராட்டக் களத்தில் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் திரைப்படப்பாடல் இது. இன்னும் எம் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது 
எமது இளமைக் காலங்கள் அனைத்தையும் தனது குரல்வளத்தால் நிரப்பிய அற்புதமான பாடகர் டி .எம். எஸ் அவர்கள்.
'கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்தே...', ' முருகா என்றழைக்கவா...' என்கிற பக்திப் பாடல்களும் அந்த நாட்களில் எம் மனசை வருடித்தான் சென்றிருக்கின்றன. சுதந்திர சிந்தனையாளனாக மாறிய பின்னரும், அப்பாடல்களை நான் ,என்னிலிருந்து அன்னியமாக்கவில்லை. அவரின் இனிமையான குரல் மட்டுமே என்னுள் எஞ்சியிருந்தது. இன்னமும் இருக்கிறது. 
சென்னை, மே 25-

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

T.M. சௌந்தரராஜன் ,கே.எஸ்.ராஜாவை 1981 இல் அவமானப்படுத்தினார்.

T.M. சௌந்தரராஜன் காலமானதென்பதில் கவலையுண்டு.சிறந்த பாடகர்தாம்.அற்புதமாகத் தமிழை உச்சரிப்பதில் இவரும் ஒருவர்.
எங்களுக்குச் சிறுவர்களாக நாம் இருந்தபோது சீர்காளி-சௌந்தரராஜன் இருவருமே எமக்குப் போட்டியாளர்கள். 

சீர்காளியின் இனிமையான கணீர் குரலுக்கும்,கம்பீரமான சௌந்தரராஜன் குரலுக்கும் போட்டி.இறுதியில் ,பெரியவர்களது இறுதித் தீர்ப்புச் சீர்காளியே சிறந்த பாடகன் என்பதாக இருக்கும்.

நான், இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

சௌந்தரராஜன் கொழுப்பிலொரு கச்சேரி வைத்தது 1981 ஆம் ஆண்டுவென நினைக்கிறேன்; கொழும்புச் சுகதாசா விளையாட்டரங்கு மண்டபம் நிறைந்த கூட்டம் .

முண்டு பிடித்துத் திரண்ட சன வெள்ளத்துள் சௌந்தரராஜன் கச்சேரி வைத்தார்.

ரிக்கட் கிடைக்கவில்லை எனக்கு.

என்னைப்போல் பல நூறுபேர்கள் வீதியில் நிற்கிறோம்.கச்சேரி ஆரம்பமாவதற்கு முன் உள்ளே செல்லவேண்டும்.கொழும்பு நகரத்து MGR இரசிகர்கள் பலர் அந்த வெளியில் நிற்கும் எமக்குள் நின்றார்கள்.அவர்கள் ,சுகதாச விளையாட்டரங்க மதிலின் மீதேறி முகட்டினூடாக உள்ளே இறங்கும்போது அதைப் பார்த்த நானும் உள்ளே ஒருவாறு வந்துவிட்டேன்.

கச்சேரியைத் தொகுத்து வழங்கியவர் கே.எஸ்.ராஜா.அவர் , சௌந்தரராஜன் குறித்து நிறையவே அறிமுகஞ் செய்யும்போது (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.சிலவேளை கே.எஸ்.ராஜாவின் தொகுப்பு ஒரே அறுவைதாம்.இங்கேயும், அப்படித்தாம்)சௌந்தரராஜன் " எனக்கு உலகினில் அறிமுகந் தேவையில்லை" யெனத் தடுத்து கே.எஸ்.ராஜாவை அதில் அவமானப்படுத்தினார்.

எனினும் ,யாரையும் ஏமாற்றாது பல பாடல்களைத் தந்தார்.

சௌந்தரராஜன் அடக்கத்துக்குப் பேர் போனவரில்லை.

சீர்காளிதான் மிகவும் அடக்கமானவர்-கருணையுடையவர்.

சௌந்தரராஜன் மிகவும் கர்வமான பாடகர்.

என்றபோதும் ,அந்த 1981 ஆம் ஆண்டுக் கச்சேரி முடிவில் சனம் வீடு திரும்ப அரங்கைவிட்டெழும்போது ஒரு பாடலைப் பாடினார், T.M. சௌந்தரராஜன்!

அந்தப் பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்க்காத பெண்களும்-ஆண்களுமே இல்லை.

எல்லோரும் ஒருகணம் அவரையே பார்த்துக்கொண்டு சிலைபோல் நின்றோம்.

அப்பாடலானது "ஏரிக்கரைமீது போறவளே பொன் மயிலே நில்லும் கொஞ்சம்-நானும் வாரேன்"எனும் பாடலே!அற்புதமான நிகழ்வது-இப்பாடலைப் பாடிய அதே மேடையில் அவரது மூன்றாந்தாரமோ இல்லை, நாலாந் தாரமாகவோ ஒரு அழகிய இளம் பெண்ணும் T.M. சௌந்தரராஜனது மனைவியாக வந்திருந்தார்.அவரது சுருள் முடியும், அழகிய உடலும் இன்னும் ஞாபகமாகவிருக்கிறது எனக்கு! ;-)


Itrtamil Itrtamil தம்பி இந்த நிகழ்சிக்கு அவர்வந்தபோது இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின்போது அவர்சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வந்தது ஓரம் போ பாடகர்கள் எல்லோரும் விரைவில் ஓரம் போய் விடுவார்கள் என்றுசொன்னார் ஆனால் அவரது கூற்று பொய்யானது அப்போது 
ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருகுது 
என்ற பாடல் பிரபலமாக ஒலித்தகாலம் 
இருந்தாலும் அவருக்கு எமது அஞ்சலியை தெரிவித்து கொள்வோம் 
நன்றி

No comments:

Post a Comment