Wednesday, May 29, 2013

லண்டனில் மேற்கத்தேய இசையுடன் இந்திய பாரம்பரிய இசையை இணைத்து நடுவர்களைக் கொள்ளைகொண்ட அபி!


லண்டனில் உள்ள ஆசிய மாணவர்களிடையே நன்கு பரீட்சயமான அபி சம்பா பல்கலைக்கழகத்தில் பல் வைத்தியத்துறையில் பயின்று வரும் இவர் இசைமீதும் அதி பற்றுள்ளாவர்.
இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அபி சம்பா 8 வயதிலேயே இந்திய பாரம்பரிய இசையை கற்கத் தொடங்கிவிட்டார்.
சக்ஸஃபோன், வீணை என்பவை இவர் ஆரம்பத்தில் கற்கத்தொடங்கிய இசை வாத்தியங்கள். அதைவிட தமிழ், ஆங்கிலம், பஞ்சாப் மொழிகளில் பாடும் திறமையும் பெற்றார்.
தனது பிரிட்டிஷ் நண்பரும் ரேப் பாடகருமான லோவெனுடன் இணைந்து Teardrops எனும் பாடலை முதலில் வடிவமைத்தார்.
இலங்கையின் யுத்தத்தினால் அனாதைகளானவர்களின் அவல நிலையை எடுத்துக்கூறும் பாடல் இது. பிபிசி ஏசியன் நெட்வேர்க் வரை இதயத்தை தொட்டது இப்பாடல்.
தொடர்ந்து மீண்டும் மீண்டும் வானொலியில் இப்பாடல் ஒலிக்கப்பட்டதால் பிரபலமடையத்தொடங்கிய அபி சம்பா, இதை தொடர்ந்து சில இசை நிகழ்வுகளில் நேரடியாக நேரடி பெர்ஃபோமன்ஸ் செய்ய தொடங்கினார். எனினும் தனது படிப்பிலும் கவனம் செலுத்த தவறவில்லை. விரும்பியவாறே ஒரு பக்கம் பல் மருத்துவ தொழில், மீதமுள்ள நேரங்களில் இசை என தொடரும் இவரது வாழ்க்கை பயணத்தில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது லண்டனில் நடைபெறும் பிபிசியின் Voice of UK 2013.
சில வாரங்களுக்கு முன்பு ஆடிஷனிலிருந்து போட்டிக்கு யாரை தெரிவு செய்யலாம் எனும் இறுதிப் பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மேற்கத்தேய இசையுடன், இந்திய பாரம்பரிய இசையை இணைத்து அபி சம்பா பாடியிருந்த 'Stop Crying Your Heart out' எனும் பாடல் அரங்கிலிருந்த நடுவர்கள், பார்வையாளர்களை மாத்திரமல்லாது சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் பெரிதும் கவனத்தை பெற்றுள்ளது.
மேற்கத்தேய இசை, இந்தியன் கிளாசிக்கல் இசை இரண்டும் வெவ்வேறு துருவங்கள். அவற்றை ஒரே முடிச்சில் இணைத்து மேற்கத்தேய இசையிலிருந்து, இந்தியன் கிளாசிக்கலுக்கு ஒரு பாடலை கொண்டுவருவது மிக கடினமானதும் கூட. ஆனால் அதை இயல்பாக கொண்டுவந்தார் அபி சம்பா.
ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருந்தது. அப்பாடலுக்கு ஆடிஷனில் ஒரு நடுவரின் அங்கீகாரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இவர் அடுத்த சுற்றுக்களிலும் பிரகாசிப்பார் என எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்களும் அவரும் எதிர்பார்க்கின்றனர்.
அவர் பாடிய பாடல்களுள் சில பாடல்கள்
தமிழ்வின்னுக்காக ஈழம்ரஞ்சன்

No comments:

Post a Comment