Sunday, May 26, 2013

சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்!


சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான (Shanghai International Film Festival இல் கனடா, ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவு செய்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.
புலம்பெயர் தேசங்களில் கிடைக்கின்ற வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டும் ஈழத்தமிழ் இளங்கலைளுர்களின் முயற்சிகளில் ஒன்றாக இவைகள அமைந்துள்ளன.
ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring திரைப்படமானது 112 நாடுகளில் இருந்து போட்டிப் பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து A Gun & A Ring உட்பட 12 படங்கள் மட்டுமே Golden Goblet விருதுக்கான தேர்வுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் படலைபடலை தொலைக்காட்சி நாடகம் ஊடாக புலம்பெயர் தமிழர்கிள் அபிமானத்தினை பெற்றிருந்த கலைஞர்களில் ஒருவராக பாஸ்கரன் அவர்கள் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார்.
2013 யூன் 15-23 வரையில் சீனாவின் ஷாங்காய் நகரில் விழா நடைபெற இருக்கின்ற நிலையில் இதே யூன் மாத பகுதியில் புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou திரைவிழாவில் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படம் திரையிடப்படுகின்றது.

No comments:

Post a Comment