Monday, May 13, 2013

சல்லாப சாமியாருக்கு எதிர்ப்பு


அரியானா மாநிலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த சாமியார், ஆசிரமம் அமைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ளது கரோதா கிராமம். இங்கு சாமியார் ராம்பால் மகராஜ் என்பவர் ஆரிய சமாஜ் ஆசிரமம் அமைத்து வருகிறார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஆசிரமம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று ஆசிரமத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது ராம்பால் மகராஜின் பக்தர்கள், ஆதரவாளர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் கலவரம் வெடித்தது.

இரு தரப்பினரும் கல்வீச்சு, அடிதடியில் இறங்கினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கும்பலை கலைக்க தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கும்பலை கலைத்தனர். அப்போது போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 பேர் பலியாயினர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பஸ்கள், பைக்குகள், மதுக் கடைகளை தீ வைத்து கொளுத்தினர். இந்நிலையில், நேற்றிரவு ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். இந்த கலவரத்தில் 40 போலீசார் உள்பட 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலருடைய நிலை கவலைக்கி டமாக உள்ளது.வேதத்தை இழிவுபடுத்துகிறார் ராம்பால். அவருக்கு ஆசிரமம் நடத்த தகுதி இல்லை. அவரை விரட்டி அடிக்க வேண்டும். அமைதியாக போராட்டம் நடத்த சென்ற எங்களை போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கிராம மக்கள் ஆவேசமாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment