Tuesday, April 9, 2013

மறைந்த பிரித்தானிய பிரதம மந்திரி Margaret Thatcher பற்றிய கனடிய அரசியல் வாதிகளின் புகழுரைகள்!


கனடிய அரசியல் தலைவர்கள் சமூக பொது தகவல் தொடர்பு சாதனங்கள் ஊடாக மறைந்த பிரித்தானிய பிரதமர் Margaret Thatcher அவர்களுக்குத் தங்களது துயரச்செய்திகளையும் அவரைப்பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
திறைசேரி சபைத் தலைவர்  Tony Clement தனது இளம் பிராயத்தில் தட்ச்சர் ஒரு தூண்டுதலாக இருந்தவர் என ருவிற்ரர் சாதனம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஊனமடைந்த வீரர் நடவடிக்கைகள் அமைச்சர் Steven Blaney , தட்ச்சர் ஒரு மிகச்சிறந்த தலைவி என  Twitter ல் கூறியுள்ளார்.
கொன்சவேற்ரிவ் MP Michelle Rempel  தான் அரசியலில் நுழைவதற்கு காரணம் இவர் தான் காரணமென வர்ணித்துள்ளார்.
லிபரல் கட்சி Bob Rae, தட்ச்சரின் அரசியல் முறையைத் தான் பகிர்ந்து கொள்ள வில்லை ஆனால் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் பாராட்டுவதாகக் கூறினார்.
87 வயதான Margaret Thatcher இன்று காலை ஏற்பட்ட ஸ்ரோக்கினால் காலமானார்.
 http://www.canadamirror.com/canada/8742.html


இரும்புப் பெண்மணி மார்கரெட் தட்சர் காலமானார்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 12:37.39 PM GMT ] [ பி.பி.சி ]
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சர் திங்கட்கிழமை காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும்.
பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார்.
பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் போக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது.
1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.
சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.

No comments:

Post a Comment