Saturday, April 6, 2013

யாழில் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்!- பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள்!


க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் யாழ்.மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரியிலேயே நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் கல்வி கற்ற இரண்டு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்கான புள்ளிகளைப் பெற்ற போதும் அவர்கள் பொது விவேகப் பரீட்சையில் குறைந்தளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் தரம் பொது விவேகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவிகள் பாடசாலை ஊடாக விண்ணப்பித்த போதும் அவர்களது பரீசை அனுமதி அட்டைகளை பாடசாலை அதிபர் கொடுக்க மறுத்துள்ளதோடு மாணவிகளையும் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் மாணவிகள் பரீட்சைக்கு தோற்றவில்லை. இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரையும் மூன்று தடவைக்குள்ளாக பொது விவேகப் பரீட்சையில் சித்தியடைந்து பெறுபேற்றை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் மீண்டும் இரண்டாம் தரம் பரீட்சைக்கு தோற்றினால் பாடசாலையின் பெறுபேற்று விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து விடும் என அதிபரும் ஆசிரியர்களும் மாணவிகளை அச்சுறுத்தியே இரண்டாம் தரம் பரீட்சைக்க தோற்றுவதற்கு அனுமதிக்கவில்லையென்று மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment