Sunday, April 14, 2013

சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள இலங்கை முயற்சி? ஜனாதிபதி சீனா விஜயம்!


சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்வதன் மூலம் இந்த சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவருடன் ஏற்கனவே இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஏற்கனவே சீனா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ரத்துச் செய்தமையால் இலங்கையில் ஆடைக் கைத்தொழில்துறை பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சீனாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் நீண்ட கால அடிப்படையில் பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும், இத்துறைக்கு புத்துயிர் அளிக்குமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி சீனா செல்கிறார்
இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலக வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 
சீனாவின் புதிய ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருடன் பேச்சுக்களை நடத்தவே மஹிந்த பீய்ஜிங் செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது, மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
 

No comments:

Post a Comment