Tuesday, April 9, 2013

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராயிட் மொபைல் அறிமுகம்!!


கடந்த 2004 பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் என்னும் சமூக இணையத்தளம் தற்போது ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மார்க் சக்கர்பெர்க் என்பவர் தனது ஹார்வேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நண்பர்கள் சிலருடன் தொடர்பில் இருப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இந்த இணையத்தளம் தற்போது அனைவரது வாழ்க்கையிலும் இணைந்து விட்டது.
எல்லோராலும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த பேஸ்புக் ஹோம் என்ற ஆன்ட்ராயிட் மொபைலை கடந்த புதன்கிழமை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து இணையத்தள சேவைகளும் ஒரே திரையிலிருந்தே தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உபயோகிப்பாளர் எந்த சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் திரையின் மேற்புறம் அவருக்கு வரும் செய்தித்தொகுப்புகள் ஒளிரும்படியான சிறப்பு வசதி இந்த போனில் செய்யப்பட்டுள்ளது. செய்தி அனுப்புபவர் எந்த சேவை மூலம் அனுப்பினாலும் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து உபயோகிப்பாளரின் திரையில்,  வெளிக்காட்டும் இத்தொழில்நுட்பத்தை  நீண்ட காலமாக எந்த பெரிய நிறுவனமும் அறிமுகப்படுத்தாத ஒன்றாகக் கருதப்படுகின்றது.விற்பனைக்கு வரும்போது இது குறித்த மக்களின் கருத்துக்கள தெரியவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment