Saturday, April 6, 2013

பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கும், நடத்துனருக்கும் மரண தண்டனை !


குருணாகல் மாவட்டம் அளவ்வ யான்கல்மோதர தொடரூந்து கடவையில் இந்த பேருந்து விபத்து இடம்பெற்றது. குறித்த பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கும், நடத்துனருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்தும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 41 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
குருணாகல் உயர் நீதிமன்ற நீதவான் பிரியந்த பெர்னாண்டோ குறித்த இரண்டு பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது.
பேருந்தின் சாரதி அப்துல் வஹிட் மற்றும் நடத்துனர் புத்திக ருவான் குமார ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த இருவருக்கும் எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா பத்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஒரு மாத சிறைத்தண்டனை நீடிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment