Tuesday, April 9, 2013

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் இன்று!


யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் இன்று!

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின் பங்குனித் திங்கள் பொங்கல் இன்று நடைபெற்றது.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமைபெற்று விளங்குவது மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயமாகும். குடாநாட்டின் பல
பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் வருகைதந்து பொங்கல் செய்து படையல் செய்தார்கள்.
அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக காவடி, தூக்குக் காவடிகள் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளன.
பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்றை அறிய முடியாது போயினும் ஆயிரத்தி 750 ஆம் ஆண்டு நாகர் கதிர்காமர் என்பவராக கட்டப்பட்டதாக யாழ் மாவட்ட செயலகத்தின் பதிவுகள் வெளிக்காட்டுகின்றன.
சித்தர்களால் வழிபடப்பெற்ற ஆலயம் பன்றித்தலைச்சி ஆலயம் என வரலாறுகள் கூறுகின்றன.
kovil_433_300

No comments:

Post a Comment