Thursday, April 11, 2013

சிலுக்கு சுமிதாவின் கடைசி ராத்திரி !


"நேத்து ராத்திரி... யம்மா' என சிணுங்கி சிலிர்க்க வைத்த "சிலுக்கு' ஸ்மிதாவின் கடைசி இரவு மர்மத்தை உடைக்கப் போகிறது ஒரு திரைப் படம்... என தென் னிந்திய சினிமா வட்டா ரங்களில் திகிலைக் கிளப்புகிறது ஒரு தகவல்.

1960-ல் பிறந்த சிலுக்கு 1980-களில் "சிலுக்கு இல்லாம படமே ஓடாது' என்கிற மவுசை உண்டாக்கி... இந்திய சினிமாவையே தன் கடைக் கண் வீச்சில் மயக்கி வைத் திருந்தார். 1996 செப்டம்பர் 23-ந் தேதி சிலுக்கு தற்கொலை செய்துகொண் டார்... என்கிற செய்தியை இன்றளவும் ஜீரணிக்க முடி யாமல் வேதனைப்படுகிறவர்களும் உண்டு. சிலுக்கு இல்லை என்றாலும் இன்றளவும் சினிமா உலகில் சிலுக்கு புகழ் லாபகரமானதாக இருக்கிறது.

"டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் இந்தியில் சிலுக்கு கதை படமானது. 18 கோடியில் தயாரிக்கப் பட்ட இந்தப் படம் உலகம் முழுக்க சுமார் 120 கோடி ரூபாயை வசூலித்தது. ஆனால் தற்போது தமிழில் இப் படம் வெளியாக உள்ளதாம். அதில் சிலுக்கு கடைசி இரவு என்ன செய்தார் ? எப்படி இருந்தார் ? அவர் எவ்வாறு தற்கொலை செய்தார் ? ஏன் தற்கொலைசெய்தார் என்பது போன்ற பல விடையங்கள் இப் படம் ஊடாக வெளியாக உள்ளதாம் ! அது வரை பொறுத்திருங்கள் மக்களே !

No comments:

Post a Comment