Saturday, April 6, 2013

மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை


அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 02:51.35 PM GMT ]
நேற்று இரவு வெளியான 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண  தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள் வெளியாகியுள்ளன.
முதல் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தசன் ஜெயசிங்க மற்றும் கொழும்பு சங்கமித்த கல்லூரியைச் சேர்ந்த சத்துரிக்கா ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை சங்கமித்தா கல்லூரியைச் சேர்ந்த காயத்திரி அல்விஸ் பெற்றுக் கொண்டதுடன்,
மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மடஸ்மித்தா ரணவக்கேயும் பெற்றுக் கொண்டுள்ளார்.


மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 03:39.24 PM GMT ]
கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை மாணவர்கள் 25 பேர் ஒன்பது பாடங்களில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெளியாகியுள்ள இணையத்தள பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் தோற்றிய 21 மாணவர்களும் ஆங்கில மொழியில் தோற்றிய 04 மாணவர்களும் ஒன்பது பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளதுடன் தமிழ் மொழியில் 06 மாணவர்களும் ஆங்கில மொழியில் 05 மாணவர்களும் எட்டு ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment