Monday, April 22, 2013

இரண்டு நிமிட காதலிக்கு 2 மாதங்களாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் காதலன்!


ரஷ்யாவின் Irkutsk என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly(33) என்ற இளைஞர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொழுது ஒரு பெண்ணை கண்டுள்ளார்.

அந்த பெண்ணின் இரண்டு நிமிட காதல் பார்வையில் காதலில் விழுந்தார் vitaly. இவர் காதலில் விழுந்த நேரம் பேருந்து வரவே, அந்த பெண் அடுத்த நாள் காலை 8 மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
தனது இரண்டு நிமிட காதலியின் வருகைக்கு, வீட்டிற்கு செல்லாமல் இரண்டு மாதங்களாக அதே பேருந்து நிலையத்தில் கையில் பூங்கொத்துடன் காத்திருக்கிறார் இந்த இளைஞர்.
மேலும் அவர் கூறுகையில், எனது இரண்டு நிமிட காதலியின் பெயர் மரியானா என்று ஆரம்பிப்பதாகவும், எனது இரண்டு நிமிட காதலியின் கண்களில் தெரிந்த உண்மை காதலுக்காக இரண்டு மாதங்களாக இங்கு காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment