Wednesday, March 27, 2013

MLA வீர விளையாட்டு விளையாடுவாங்க தான் !


அட என் கட்சி எம்.எல்.ஏக்கள் என்றால் வீர விளையாட்டை விளையாடுவாங்க .... அதுக்காக சட்டசபையில் இருந்து 1 வருடத்துக்கு அவர்களை தடைசெய்வதா ? இது எந்த ஊர் நியாம் ? என்று எகிறிக் குதிக்கிறார் விஜயகாந். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து எகிறி, “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும்கட்சி எடுத்த நடவடிக்கை இது என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார். இதை கண்டித்து, மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் அக்கட்சி சார்பில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டசபை வளாகத்தில், தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தாக்கப்பட்டது தொடர்பாக, உரிமை குழு விசாரணை நடத்தப்பட்டு, தே.மு.தி.க.வை சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள், ஓராண்டிற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கை இது” என விமர்சித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, தே.மு.தி.க.வினர், சென்னை சைதாப்பேட்டை உட்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கலைந்து போகாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். “தே.மு.தி.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தமது பிரச்னைகளை வெளியே ‘தீர்த்து’ கொள்ளாமல், சட்டசபைக்குள் வீர விளையாட்டுக்களை காட்டியது ஏன்?” என்று கண்டன பொதுக்கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் கேட்பார்களே…

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4759

No comments:

Post a Comment