Monday, March 18, 2013

திருமணம் செய்ய காதலி மறுத்ததால் பாதிரியார் ஆன போப் பிரான்சிஸ் !!


16ம் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகியதால் புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ் (77), சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வருகிற 19ம் திகதி போப் ஆண்டவராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், அவரது இளமைக் கால காதல் தற்போது வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.

12 வது வயதில் இவரது குடும்பம் இத்தாலியில் இருந்து அர்ஜென்டினாவுக்கு குடியெர்ந்து வந்தது. அவரது தந்தை ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது வீட்டுக்கு அருகில் அமாலியா தாமோந்த் என்ற சிறுமியும் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். அப்போது இவருக்கும் 12 வயதுதான்.
இவர்கள் இருவரும் தெருவில் விளையாடிய போது நண்பர்களாகினர். காலப்போக்கில் சிறுவன் ஜார்ஜ் மரியோ (போப் ஆண்டவர் பிரான்சிஸ்) மனதில் அமாலியா மீது காதல் அரும்பியது.
ஒரு நாள் அமாலியா எதிர்பாராத நிலையில் ஜார்ஜ் மரியோ அவனது கையில் ஒரு கடிதத்தை திணித்தார். அதைப் வாங்கி படித்து பார்த்த அமாலியாவுக்கு இன்ப அதிர்ச்சி இருந்தது. அதில் நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்ய விரும்புகிறேன் என கூறி இருந்தார். அந்த விவகாரம் அவளது பெற்றோருக்கு தெரிய வர எதிர்ப்பு கிளம்பியது.
ஏனெனில், இவர்கள் இருவரும் அப்போது மிகவும் சிறுவர்களாக இருந்தனர். இதற்கிடையே ஜார்ஜ் மரியோவோ தனது கடிதத்துக்கான பதிலை அமாலியாவிடம் இருந்து எதிர்பார்த்தார்.
ஒரு நாள் ஜார்ஜ் மரியோவை சந்தித்த அமாலியா நான் உன்னை திருமணம் செய்ய முடியாது, சன்னியாசி ஆக போகிறேன் என கூறிவிட்டார். பின்னர் அவரது தந்தை அங்கிருந்து குடும்பத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் ஜார்ஜ் மரியோ மனதில் மற்றொரு காதலுக்கு இடமில்லாமல் பாதிரியார் ஆகிவிட்டார்.
அமாலியாவுக்கும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது இவருக்கும் 77 வயதாகிறது. ஒரு மகன் இருக்கிறார். பியூனஸ் ஏர்ஸ் நகரில் மெம்பிரானில்லா தெருவில் இருந்து சென்ற பின்பு ஜார்ஜ் மரியோவை அவர் ஒரு தடவை கூட பார்த்ததில்லை.
இந்த நிலையில் புதிய போப் ஆண்டவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. அதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த அமாலியா இளம் வயதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சுடன் இருந்த நட்பையும், அவர் தன் மீது வைத்திருந்த காதலையும் ரிவி மற்றும் பத்திரிகைகளில் பேட்டி மூலம் தெரிவித்தார்.
அப்போது ஜார்ஜ் மரியோ தனது வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவருடன் ஆன திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாக கருதுகிறேன். உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கிறிஸ்தவர்களின் தலைவராக அவர் பதவி ஏற்க இருப்பதை காண ஆவலாக இருக்கிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

No comments:

Post a Comment