Thursday, March 28, 2013

இங்கிலாந்து பெண்ணிற்கு ஹோட்டலில் நடந்தது என்ன !!


உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஹோட்டல் மனேஜரிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்த இங்கிலாந்து பெண் அந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஆக்ரா மகாலில் தங்கியிருந்தவர் லண்டனைச் சேர்ந்த ஜெசிகா டேவீஸ் (31). அவரிடம் ஹோட்டல் மனேஜர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதால் அவர் பால்கனியில் இருந்து கீழே குதித்து தப்பித்தார்.

இதையடுத்து இங்கிலாந்துக்கு சென்ற அவர் நடந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.பேட்டியில்,அவர் ஆக்ரா மகால் ஹோட்டலில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் ஹோட்டல் மனேஜர் 2 எண்ணெய் பாட்டில்களுடன் அவரின் அறைக்கு வந்ததாகவும், ஹோட்டல் மனேஜர் இவருக்கு மசாஜ் செய்துவிடுவதாகக் கூறி, அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கூறினார்.

தொடர்ந்து ஹோட்டல் மனேஜர் இப்பெண்ணை தொந்தரவு செய்த நிலையில், மின்தடை ஏற்பட்டதால் அவரின் மொபைலும் செயலிழந்து போனது. உதவிக்காக கதறியபோதும், உதவி செய்ய யாரும் முன்வராததால் வேறு வழியின்றி பால்கனியிலிருந்து குதித்ததாக அவர் தெரிவித்தார்.இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததால் காலில் காயத்துடன் தெருவில் ஓடிப் போய் உதவி கேட்டபோதும் யாரும் புரிந்துகொள்ளவில்லை என கூறிய அவர் இறுதியில் ஒரு ரிக்ஷாஓட்டுனர் தான் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கு தனியாகச் செல்லும் பெண்களை எச்சரிக்கவே அவருக்கு நேர்ந்ததை தற்போது தெரிவித்துள்ளதாகவும், இந்த சம்பவத்தால் இனிமேல் இந்தியாவிற்கு செல்லாமல் இருக்கமாட்டேன், ஆனால் இனி கண்டிப்பாக இந்தியாவிற்கு தனியாக செல்லமாட்டேன் என்றார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4770

No comments:

Post a Comment