Thursday, March 14, 2013

புதிய போப் ஆண்டவர் தெரிவானார்! உலக கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியில்!!


புதிய போப் ஆண்டவர் தெரிவானார்! உலக கிறிஸ்தவர்கள்  மகிழ்ச்சியில்ஆஜென்டீனாவைச் சேர்ந்த 76 வயதுடைய கார்டினால் ஜோர்ஜ் மாரியோ பேர்கொக்லியோ (Jorge Mario Bergoglio)புதிய போப் ஆண்டவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் முதலாவது பிரான்ஸிகஸ் (Franziskus I)என அழைக்கப்படுவார். ஐரோப்பிய நேரம் இரவு 7:06 மணிக்கு தெரிவு செய்யப்பட்டு 8மணி 25 நிமிடத்தில் மக்களுக்கு தோன்றினார்.


புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சதுக்கத்தில் வெள்ளைபுகை
புதிய போப் ஆண்டவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இன்று இரண்டாவது நாள்சதுக்கத்தில் வெள்ளைபுகை சில நிமிடங்களிற்கு முன்னம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சென்ற் பீற்றர் சதுக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒரு மணித்தியாளத்தில் புதிய போப்பாண்டவர் மக்களுக்கு தரிசனம் ஆவார்.

No comments:

Post a Comment