Tuesday, March 5, 2013

அரண்மனைக்கு திரும்பினார் ராணி எலிசபெத் !

வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணி எலிசபெத் அரண்மனை திரும்பினார்.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்(வயது 86) வயிற்று வலி காரணமாக நேற்று முன்தினம் லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற அவர், நேற்று டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் அரண்மனைக்கு திரும்பினார்.
அடுத்த மாதம் 87வது வயதை நிறைவு செய்யும் ராணி எலிசபெத், சிகப்பு நிற உடையில் புன்னகையுடன் வெளியேறினார்.

வயிற்று வலி: ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொடர் சிகிச்சை
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 07:21.59 மு.ப GMT ]
வயிற்று வலி காரணமாக பிரித்தானிய ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராணி இரண்டாம் எலிசபெத்(வயது 87), இவருக்கு கடந்த வெள்ளியன்று(1ம் திகதி) திடீர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். பின்னர் லண்டனில் உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டொக்டர்கள் பரிசோதித்து வந்ததில் வாயு கோளாறால் அவதியுற்றுவருவதாக தெரியவந்தது. தற்போது தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் எலிசபெத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment