Tuesday, February 12, 2013

ஹட்டன் – காமினிபுரவில் விழுந்தது விண்கல் துண்டா?


கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஹட்டன் – காமினிபுர பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் பெய்த மழையுடன் இனம் தெரியாத பொருள் ஒன்று வானத்தில் இருந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மிக சிறியதாக தங்க நிறத்தில் காணப்பட்டுள்ளது சுமார் 20 துண்டுகள் வரை வீழ்ந்தாக இந்த வீட்டு உரிமையாளர் பெண் தெரிவித்தார்.
முதலில் தனது தங்க தோடு உடைந்து வீழ்ந்ததாக நினைத்த இவருக்கு அடுத்த கனமே வீட்டின் முற்றம் முழுவதும் துண்டுகள் விழுந்ததை கண்டு அவற்றை சேகரித்துள்ளார்.
பின்னர் அயளவர்களிடம் தாம் இது பற்றி தெரிவித்ததாகவும் இவர் கூறினார்.
இப்பகுதியில் உள்ள சிலர் இந்த துண்டுகளை எடுத்து சென்றதாகவும் இவர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment