Friday, January 18, 2013

யாழில் போக்குவரத்து சபை அலுவலகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை !


இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்கர் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வருகின்றார். இதனால் இந்த அலுவலகத்தில் தங்களால் பணியாற்ற முடியவில்லையென்று பெண் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். இ.போ.சபையின் வடபிராந்திய தலைமை அலுவலகம் யாழ்ப்பாணம்-கோண்டாவிலில் இயங்குகின்றது. மேற்படி போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியப் பிரதிப் பொது முகாமையாளர்களாக இதுவரை காலமும் தமிழர்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முஸ்லிம் இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலுவலகத்தில் முன்னர் பொது முகாமையாளராகப் பணியாற்றிய கணேசபிள்ளை ஓய்வுபெற்ற பின்னர் அடுத்ததாக முகாமையாளராகப் பதவி வகிக்கக்கூடிய தகமை உடைய மற்றொரு உத்தியோகத்தர் அங்கு இருந்த நிலையிலும் வன்னியை ஆக்கிரமித்திருக்கும் அமைச்சர் றிசார்ட் பதியுதீனின் ஆதிக்கத்தால் அஸ்கர் என்ற மேற்படி முஸ்லிம் இனத்தவர் முகாமையாளராக நியமிக்கப்பட்டார். பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த நியமனம் இடம்பெற்றது. இவர் பதவியேற்ற பின்னர் வடபிராந்தியத்திலுள்ள போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஊழியர்கள் பகிஸ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மேற்படி பொது முகாமையாளர் இங்கு பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியான இம்சைகளுக்கு உள்ளாக்க முற்படுவதாகவும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமையாளர் தனிமையில் உள்ள நேரங்களில் அவரிடம் அலுவலக விடயங்களைச் சென்று கதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்படி பெண் உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் சில பெண் உத்தியோகத்தர்கள் வேலையை விட்டு விலகுவதற்கும் முயற்சியெடுத்து வருவதாக தெரிய வருகின்றது. எனவே, இவரை வேறு இடத்திற்கு இடமாற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மேற்படி பெண் உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, மேற்படி அஸ்கர் என்பவர் வடபிராந்திய பிரதிப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் போன்ற சாலைகளில் ஏற்பட்ட வெற்றிடங்கள் அனைத்திற்கும் அவர் முஸ்லிம் இனத்தவர்களையே நியமித்துள்ளார். எந்தவொரு தமிழருக்கும் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4394

No comments:

Post a Comment