Friday, January 25, 2013

பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசாமி கைது! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் !!


கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனுக்கு கிடைத்த தகவலையடுத்து மகளிர் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்து விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:
பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் இரு மாணவிகள் குறித்த நபரினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை வத்தளைப் பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற 34 வயதுடைய குறித்த நபர் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்தினை கலந்து கொடுத்து இச் செயலைப் புரிந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
தனித்தனியாகவே இந்த இரு மாணவிகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்திருந்த போதிலும் இவ்விடயம் குறித்து முறைப்பாடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்விடயம் பாடசாலைக்கு தெரியவந்ததையடுத்து குறித்த இரு மாணவிகளும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே இவ்விவகாரம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. கொழும்பு புற்க்கோட்டையில் வர்த்தகராகச் செயற்படும் குறித்த நபர் மாணவிகளை ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அழைத்துச் சென்றுள்ளதமாக தெரியவந்துள்ளது. வத்தளையிலுள்ள வீட்டுக்குத் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளுக்கு குளிர்பானம் அருந்தியது மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மாணவிகள் மருத்துவ பரிசோனைக்குட்படுத்தப்பட்டதையடுத்து பாலியல் வல்லுறவு இடம்பெற்ற விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. கைதான குறித்த நபர் இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரும் மாணவியொருவரை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமெடுத்து மிரட்டியதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதான சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் வவுனியாவைச் சோ்ந்த சில மாணவிகளினது புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் வவுனியாவில் குறித்த சந்தேகநபர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர் திருமணமானவர் என்றும்  இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை எனவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

No comments:

Post a Comment