Monday, January 21, 2013

நெதர்லாந்தில் அதிர்ச்சியளிக்கும் நகரும் தீவு !!


நெதர்லாந்தில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவான Schiermonnikoog தனது இருப்பிடத்திலிருந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது.

புவியின் கண்டங்களும் சிறியதொரு நகர்வைக் காட்டுகின்றன. ஆனால் இந்த தீவின் நகர்வானது ஒப்பீட்டாளவில் வேகமாக இடம்பெறுகிறது. வருடத்திற்கு 2.6 மீற்றர்கள் நகரும் இத்தீவு கடந்த 760 ஆண்டுகளில் 2 கிலோ மீட்டர் தூரம் நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது பல ஆச்சிரியங்களை தோற்றுவித்தாலும் ஆய்வை மேற்கொண்டவர்கள் சில முடிவுகளை முன்வைத்தனர். உண்மையில் தீவு நகரவில்லை. ஒரு பக்க கரையோரம் நீரினால் சூழப்படும் நேரம் எதிர்க்கரையில் நீர்மட்டம் பின்னோக்கிச் செல்கிறது. இதனால் நிலப்பரப்பிற்கும் தீவுக்கும் இடையிலான தூரம் வெறும் பார்வைக்கு மட்டும் வேறுபடுவதாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment