Sunday, December 16, 2012

விக்ரோறியாவிற்கு வீரவணக்கம்!


அமெரிக்காவின் கனட்டிக்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிலர் தங்கள் உயிரை அர்ப்பணித்து பலரது உயிரைக் காப்பற்றியுள்ளனர். அந்த வகையில் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டவராக மதிக்கப்படுபவர் விக்ரோறியோ சொடோ ஆவர்.
27 வயதான விக்ரோறியா சொடொ ஸ்ராபோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, யாருடனும் அன்பாகப் பழகும் இந்த ஆசிரியை முதலாம் தர மாணவர்களிற்கான பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் 20 வயதான அந்த இளைஞன் பாடசாலைக்குள் புகுந்து சராமரியாக சுடத் தொடங்கினான்.
நிலைமையின் தர்ப்பரியத்தை உணர்ந்த விக்ரோறியா தனது வகுப்பிலிருந்த முதலாம் தர மாணவர்களை அலுமாரிகள் மற்றும் வின்ரர் கோட்டுக்கள் தொங்கவிடப்படும் சிறிய தடுப்பு என்பனவற்றிற்குள் மறைந்து நிற்கச் செய்துவிட்டார். எதிர்பார்த்தது போலவே அந்த வகுப்பறைக்குள் வந்த கொலைகாரன்; எங்கே மாணவர்கள் என்று கேட்க,
அவர்களிற்கு இப்போ விளையாட்டு பயிற்சி நேரம் அவர்கள் விளையாட்டரங்கில் இருக்கிறார்கள் எனக்கூற கொலைகாரன் விக்ரோறியாவைச் சுட்டுக் கொண்றுவிட்டு மற்ற வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். விக்ரோறியாவின் சமயோசித நடவடிக்கையால் அந்த வகுப்பறையிலிருந்த 6 வயது மாணாக்கர்கள் அனைவரும் தப்பினர்.
நன்றி விக்ரோறியா! உனது தெளிவான தடத்தை பதித்துச் சென்றதற்காக!

No comments:

Post a Comment