Tuesday, December 4, 2012

கள்ளத்தொடர்பு காரணமாக 1989 மனைவியை விவாகரத்து செய்தார் மைக் டைசன்

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் மனைவி ஹாலிவுட் நடிகருடன் படுக்கையில் இருக்கும்போது கையும், களவுமாக சிக்கினார்.
முன்னாள் உலக சாம்பியனான டைசன், ராபின் கிவென்ஸ் என்ற நடிகையை 1988ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அடுத்த வருடமே தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது தனது முன்னாள் மனைவி குறித்து தெரிவித்தார்.
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் வீட்டுக்கு திடீர் என்று சென்றபோது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
போட்டியில் எதிரிகளுக்கு குத்துவிட்ட எனக்கு என் மனைவி குத்து விட்டது போல் இருந்தது.
நான் ஒரு மடையன், அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். அவ்வளவு தான் என்னால் முடிந்தது. அவள் ஒரு பன்றி, என்னை ஏமாற்றிவிட்டாள்.
பின்னர், சட்டத்தரனியை சந்தித்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன் என்றார்.
பிராட் பிட், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment