Friday, November 16, 2012

முகப்புத்தக [facebook] வன்முறையால் உயிரிழந்த சிறுமியின் தாயார் கருத்துப் பகிரப் புறக்கணிக்கப்பட்டார்.


அமன்டா ரொட் இந்தப் பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டார்கள். 14 வயது மாணவி முகப்புத்தக நட்புமூலம் மிரட்டப்பட்டு ஆபாசமான படங்கள் எடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டவர். அப்படி தற்கொலை செய்யமுன்னர் அவர் வெளியிட்ட வீடியோ இளயோர் உலகை உழுப்பியிருந்தது.
பருவமடைந்து பதின்ம வயதுக்குள் நுழைந்து கொண்டிருந்த அமன்டா ரொட்டை ஒரு வன்முறையாளன் எவ்வாறு தனது வலைக்குள் கொண்டுவந்து அவரை ஆபாசமான கோணங்களில் கமரா மூலம் பார்த்ததோடு மாத்திரமல்லாமல்,
அவரது ஆபாசப்படங்களை இணையவலைப் பிண்ணலிலும் உலவ விட்டான். இதன் முடிவாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அமன்டா குடிக்கும் போதைக்கும் அடிமையானார். பின்னர் மன அழுத்தத்திற்கான மருத்துவ சிகிச்சை கூட எடுத்தார்.
எதுமே பலனலிக்காமல் தான் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவள், எனக்கு யாருடையதாவது உதவி தேவை என்ற கோணத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு சிறிது நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு ஏற்பட்ட இந் நிகழ்வு மற்றையவர்களிற்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநிலத்தில் நடைபெறும் ஒரு மாணவர்களிடையேயான வன்முறை தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள அவரது தாயார் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் மாகாண அரசு அதற்கு சாக்குப்போக்குச் சொல்லி அந்த அனுமதியை இன்னமும் அளிக்கவில்லையென்பதை அவர் ஊடகங்களில் வாயிலாக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அமென்டாவின் தற்கொலை சகல பெற்றோரிற்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைவதோடு, தங்கள் பிள்ளைகள் கணணி மூலமான தொடர்புகளை தவறாகப் பாவிக்காது வழிகாட்டுவதும் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

http://www.canadamirror.com/canada/1254.html

No comments:

Post a Comment