Friday, October 19, 2012

வறுமையால் வாடியோருக்கு அம்மன் உதவினால் தவறாம் சொல்கிறார் சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா!!!


அவங்க வறுமையை போக்கத்தான் கடவுளை உபயோகிக்கிறாங்க என்கிறப்போ அதை தவறாக பார்க்கும் நிர்மலா பெரியசாமி போன்றோர் நித்யானந்தா போன்று பல கோடிகளுக்கு அதிபதிகளை அவர்களது செல்வாக்குக்கு பயந்து எதுவும் சொல்வதில்லை.கடவுளை அவர் உண்மை என்றால் எதற்கு போகச்சொல்லவேண்டும். கடவுளால் பிள்ளைக்கு என்ன கெடுதல் வரும்??பிள்ளையின் சகஜமான வாழ்க்கை கெடும் என்று எப்படி நினைக்கிறார்கள்.வறுமையில் வாடிய போது துணைக்கு செல்லாத கூட்டம் இன்று கடவுள் பெயரால் அவர்கள் சாப்பிடால் மட்டும் அதை வியாபாரம் என்று கூச்சல் போடுவதேன்??பொறாமையா??கொடுக்கனக்கில் சம்பாதிக்கும் கொள்ளையரை விட்டுவிட்டு வயிற்றுப்பிழைப்புக்காக திருடும் ஒருவனை தண்டிக்கும் அரசு காவல் துறைக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு??நீ சோறு போடு,வேலை கொடு திருடினால் தண்டி,அதை விட்டுவிட்டது பசியில் இருப்பவனுக்கு போதிக்காதே .அவன் இறக்கும் வரைதான் உன் போதனை,அதன்பின் அவனது சாவுக்கு நீதான் காரணம்.அது போலத்தான் இங்கும்.கடவுளை நம்புபவன் குறி கேட்கிறான்.அது அவனது உரிமை.உனக்கு பிடிக்காவிட்டால் நீ போகாதே.சரியான உண்மை விளக்கம் உன்னிடம் இல்லாதவரை அடுத்தவனை குற்றம் சொல்லாதே,அப்படி சொன்னால் நீதான் குற்றவாளி!!நிர்மலா போன்ற பணத்திமிங்கிலங்களுக்கு ஏழ்மை புரிவது சாத்தியமா???இவர்கள் கடவுளிடம் போவது பொழுது போக்க.ஏழைகள் போவது உணவு கேட்க!!


No comments:

Post a Comment