Saturday, October 20, 2012

பிரெஞ்சுக் குடியுரிமை கோருவதற்கான பரீட்சை ரத்து!!


பிரெஞ்சுக் குடியுரிமை கோருவோர் பிரெஞ்சுக் கலாச்சாரப் பரீட்சையில் தேற வேண்டும் என்ற கட்டாயத்தினை UMP அரசு நிக்கோலா சார்க்கோசி அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் சட்டமாக்கியது. இச் சட்டத்தினை சோசலிசக் கட்சி நீக்கியுள்ளது.


முன்னைநாள் உள்துறை அமைச்சர் Claude Guéant பல இனத்துவேசக் கருத்துக்களை வெளியிட்டவர். அவர் இந்தப் பரீட்சைச் சட்டத்தை அமுல் படுத்தியபோது பல மனித உரிமைகள் அமைப்புக்கள் கடும் விமர்சனத்தைத் தெரிவித்திருந்தன.
வியாழக்கிழமை, ஸ்பெயினில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்றிருக்கும் தற்போதைய உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் பிராந்திய அலுவலகங்களுக்கு இந்த சட்ட நீக்கலை அறிவித்துள்ளார். நிரந்தர நீண்டகால வேலை பார்த்தல் ஒன்றே அவசியமானது என்றும் தெரிவித்தள்ளார். தற்போதைய சட்ட அமலாக்கத்திலிருக்கும் குறுகிய கால பணி ஒப்ந்தங்களும் தற்காலிக வேலைகளும் கூட கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் என்று துலுசில் பத்திரிகையாளர்களிடம் மனுவல் வால்ஸ் தெரிவித்துள்hர்.
« ஆனாலும் பிரெஞ்சு மொழி பேசலும் விளங்குதலும் முக்கியமானது. ஒரு பதினைந்து வயதுச் சிறுவனுக்குரிய பிரெஞ்சுப் புலமை முக்கியமானது. வெறுமனே நான்கு பதிலுள்ள வினாக்களுக்குப் பதில் சொல்வதால் மட்டும் பிரெஞ்சுப் பிரஜையாகலாம் என்பது நடைமுறைக்குச் சாத்தியற்றதும் அரத்தமற்றதும் என்பதாலேயே நான் அதை நிராகரித்தேன் » என்று தெரிவித்துள்hர். ஆனால் இதற்கும் வழைமபோல் ருஆP யின் சார்க்கோசியின் பாதுப்புப் பேச்சாளர் களபாஙக 'மனுவல் வால்ஸ் பிரெஞ்சுக் குடியுரிமையை வியாபாரமாக்குகின்றார்' என்று தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டில் 120,000 பேர் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுள்ளனர். ஆனால் அடுத்த இரண்டு வருடங்களும் இது 45சத வீதத்தால் குறைவடைந்துள்ளது. இங்கு பிறந்தவர்கள் 18 வயதுக்குப் பின்னர் குடியுரிமை பெற்றுக் கொள்வது அவர்கள் உரிமை. அதைச் சட்டங்கள் தடுக்க முடியாது என்றும் வால்ஸ் தெரிவித்துள்ளார்.
http://www.paristamil.com/tamilnews/view-news-MjI1ODA0ODY0.htm

No comments:

Post a Comment