Sunday, September 2, 2012

சிறந்த மனித உரிமையியல்வாதி இவர்தான் போங்க!!



ஒருவனை வெறிநாய் துரத்தும்போது பாதுகாப்புக்காக ஒரு அந்நிய வீட்டில் நுழையும் அவன் நாயிடம் கொஞ்சம் பொறு வீட்டுக்காரனிடம் அனுமதி பெறவேண்டும் அதுவரை காத்திரு என்று பேசிப்புரியவைத்தபின் வீட்டாரின் அனுமதியுடன்(சட்டப்படி)நாய் கடிக்காமலிருக்க வீட்டில் பாதுகாப்புத்தேடு என்கிறார்!!சிறந்த அறிவாளி,நல்ல மனித நேயர் இவர்தான்,இவர் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் நுழைந்து அந்த நாட்டு பூர்வீகக்குடிகளை கொன்று குவித்து அடிமை கொண்ட சட்டவிரோத கும்பலில் வாரீசு!!
சட்டவிரோதமான முறையில் ஆஸியில் புகலிடம் கோருபவர்களுக்கு இனிமேல் அடைக்கலம் வழங்க தயாரில்லை எனவும்,  சட்ட திட்டங்களுக்கு அமைவாக புகலிடம் கோருபவர்களுக்கு மாத்திரமே புகலிடம் வழங்கப்படும் எனவும்  அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
தற்போது படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு ஆஸிக்கு பெருமளவானோர் புகலிடக் கோரிக்கையாளர்களாக நுழைகின்றனர்.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாரில்லை எனவும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக புகலிடம் கோருபவர்களுக்கு மாத்திரமே புகலிடம் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அதற்கமைய சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பாராளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
எனவே அவுஸ்திரேலியாவில் குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள் உரிய முறையில் விண்ணப்பம் செய்து புகலிடம் கோருவோருக்கு தொடர்ந்தும் வாய்ப்பளிக்கத் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டவிரோதமான முறையில் பாதுகாப்பற்ற கடற் பயணங்களை தடுத்து நிறுத்துவதற்கு உலகின் அனைத்து நாடுகளும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பபுவா நியூகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கிறிஸ் போவன் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது பாதுகாப்பற்ற படகுப் பயணங்களினால் பலர் கடலில் உயிரிழக்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனினும் அவற்றையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் இப் பயணங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் பயணங்களை மேற்கொள்பவர்கள் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினரால் இடை மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இதில் இலங்கையில் இருந்து செல்பவர்களது வீதமே அதிகமாக உள்ளது.
ஆரம்பத்தில் தமிழர்களே சட்டவிரோதமாக செல்கினறார்கள் என்று கூறப்பட்டாலும், தற்போது சிங்களவர், முஸ்லீம்கள் ஆகியோரும் அதில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment