Tuesday, September 25, 2012

நாடு திரும்பிய 18 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 60 ஆயிரம் டொலர்கள் நிதி உதவி!


அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று தமது அரசியல் அந்தஸ்து கோரிக்கையினை கைவிட்ட நிலையில், தாயகம் திரும்பியுள்ள 18  இலங்கையர்களுக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
அவர்கள் இலங்கையில் தமது வாழ்வாதாரத்தை மீள ஸ்தாபிக்கும் நோக்கில் அவர்களுக்காக 60 ஆயிரம் டொலர்கள் வரையில் வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது. இதனை சர்வதேச குடிவரவு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
தாயகம் திரும்பியவர்களில் 14 சிங்களவர்கள் ஒரு முஸ்லிம் மற்றும் மூன்று தமிழர்கள் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒவ்வொருவருக்கும் தலா மூன்றாயிரத்து 300 டொலர்கள் வரை செலவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தற்போது, கிறிஸ்மஸ் தீவில் அகதி அந்தஸ்து கோரிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்பும் பட்சத்தில் நிதியுதவி அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்த இவர்களிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக சர்வதேச குடிவரவு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment