Thursday, August 16, 2012

ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமலஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் கோவிலுக்கும் சென்றதில்லை. தான் நாத்திகவாதி இல்லை பகுத்தறிவாளன் என்று கூறிக்கொள்வார்.
ஆனால் மகள் ஸ்ருதி ஹாசன் அதற்கு நேர் எதிர்மாறானவராக இருக்கிறார். ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
ஸ்ருதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அப்பாவைப்போலவே அதிகம் கோவிலுக்கு சென்றதில்லை. எப்போதாவது அம்மா சரிகாவுடன் சென்று விட்டு வருவார். ஆனால் தற்போது ஆன்மீகத்தின் மீது அவருக்கு நெருக்கம் அதிகமாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் ஸ்ருதி நடித்த படங்கள் சரியாக போகவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிட்டு முழுநேரமும் இசையமைப்பாளராகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாயின் ஆலோசனைப்படி திருப்பதி சென்று வந்தார்.
அதன் பின்பு அவரது சினிமா வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. தமிழில் அறிமுமான முதல் படமான 7ம் அறிவு வெற்றி பெற்றது. அதன்பிறகு ஸ்ருதிக்கு கடவுள் பக்தி அதிகமானது. தெலுங்கில் தொடர்ந்து தோல்வி படங்களாகவே ஸ்ருதிக்கு அமைந்தது.
இந்நேரத்தில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தபாங்க், தெலுங்கில் கப்பார்சிங் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் ஸ்ருதி நடித்தார். இது வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதிக்கு சென்று வந்தார்.
வேண்டுதல் நிறைவேறியது. கப்பார்சிங் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கின் முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்து விட்டார் ஸ்ருதி. அதோடு தற்போது தமிழில் வெளிவந்த உனக்கும் எனக்கும் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தனது சினிமா மாற்றத்துக்கும், வெற்றிக்கும் கடவுளின் அருள்தான் என்பதை உணர்ந்தார் ஸ்ருதி. தற்போது தீவிர பக்தையாகிவிட்டார். விமானத்தில் பறந்த பறந்து இந்தியாவின் முக்கிய கோவில்களுக்கு ரகசியமாக சென்று வழிபட்டு வருகிறார்.
முக்கிய நாட்களில் விரதம், ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் படிப்பது என்று ஆளே மாறிவிட்டார். இதுவரை பூஜையறை இல்லாத கமல்வீட்டில் விரைவிலேயே பூஜை அறையும் அமைக்க இருக்கிறார்.
மகளின் இந்த ஆன்மீக ஈடுபாட்டை உலக நாயகன் ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment