Thursday, August 16, 2012

உலகை வியக்க வைக்கும் சீனாவின் கற்குகை! [படங்கள்]


மைஜிஷன் க்ரோட்டோஸ் (Maijishan Grottoes) சீனாவின் கன்சு மாகாணத்தில் டியன்ஷுய் நகரிலிருந்து 45 கிமீ தென்கிழக்காக அமைந்துள்ளது. இது மிகவும் பழமையானதோ அல்லது பெரிய அளவிலானதோ கிடையாது.

எனினும் இதன் தனித்துவம் காரணமாக இது சீனாவில் காணப்படுகின்ற பெருமை வாய்ந்த முதல் 4 குகைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

ஏனைய குகைகளிலும் பார்க்க, மஜிஷன் க்ரோடோஸ் அதனைச் சுற்றியுள்ள மனதை வசீகரிக்கின்ற இயற்கைக் காட்சிகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

இது மலைகள் காடுகளுக்கு மத்தியில் ஆறுகள், ஏரிகள், அடிவானம் வரை நீண்டு செல்லும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அழகிய ஏரிகள் மற்றும் செழிப்பான காடுகள் என்பவற்றால் சூழ்ந்து காணப்படுகிறது

No comments:

Post a Comment