Monday, July 16, 2012

பள்ளிக்கூடம் செல்லும் வயதில் பள்ளியறைக்கா???பிள்ளைகள் விரும்பி பெற்றோரும் சம்மதித்தால் ஐரோப்பில் அனுமதியுண்டு,தமிழ்நாட்டில்??????


 மதுரை: பாட புத்தகங்களை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமக்கும் அவல நிலைக்கு, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பூப்பெய்த ஒரே காரணத்திற்காக வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் இருந்தும் பயனில்லாததால், இன்றும் "திருமணங்கள்' சத்தமின்றி நடக்கின்றன. பள்ளி அறையை நினைத்துக் கொண்டிருக்கும் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணை, "பள்ளியறைக்கு' அனுப்பும் அவலம் தொடர்ந்து நடக்க என்ன காரணம்? வேறு ஜாதி பையனை காதலித்துவிடக்கூடாது; உறவுக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் சொத்து வெளியே போகாது; ஏழ்மை, பெற்றோருக்கு உடல்நலக்குறைவு, "எப்படியோ "கரை' சேர்த்தால் போதும்' என்ற எண்ணம் போன்ற காரணங்களால், பெற்றோர், உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் குழந்தை திருமணங்கள் தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடக்கின்றன.
சமீபத்தில்கூட, மதுரை கீழவளவில் வேலாயுதம் என்பவரின் 15 வயது மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூகநலத்துறைக்கு தந்தி அனுப்பியது. இதன்பிறகே, குழந்தை திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்பே 
எச்சரித்தும், திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கீழவளவு ராஜசேகரன், வேலாயுதம், வெள்ளலூர் கட்டச்சோலைப்பட்டி பாலசுப்பிரமணியன், 17 வயதுமகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்த பாண்டிசெல்வம், சக்குடியில் 14 வயது மகளை திருமணம் செய்து கொடுக்கவிருந்த சங்கரலிங்கம், மணமகன் குமாரவேல், இவரது தந்தை ராமு ஆகியோர் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
சட்டம் சொல்வது என்ன? இச்சட்டத்தின்கீழ் கைதானால் ரூ.ஒரு லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். திருமணம் செய்து வைக்கும் முன் தடுத்து நிறுத்தலாம். ஆனால், திருமணம் நடந்துவிட்டால் தடுக்க முடியாது. மணமகனோ, மணமகளோ "எனக்கு விருப்பமில்லை' என்றால், அந்த திருமணத்தை ரத்து செய்ய முடியும்.தெளிவில்லாத இச்சட்டத்தால், கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்க முடியவில்லை.
தடுக்க என்ன வழி?: குழந்தை திருமணம் குறித்து, ஆய்வு செய்யும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மண்டல அமைப்பாளர் ஜீவா கூறியதாவது: பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் இதை தடுக்க முடியும். அதேபோல், அரசின் சலுகை பெற ரேஷன் கார்டு போன்றவற்றை ஆதாரமாக கேட்பது போல், திருமண பதிவு சான்றையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான், குழந்தை திருமணங்களுக்கு விடிவு ஏற்படும். குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள்

No comments:

Post a Comment