Wednesday, July 11, 2012

இணையம் வழியே கோப்புகளை பெற புதிய வழி !!


இணையம் வழியாக கோப்புகளை அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி புரிகின்றன. மின்னஞ்சலில் அனுப்ப முடியாத பெரிய கோப்புகளை பரிமாறிக் கொள்வதற்கு இந்த தளங்கள் உதவுகின்றன.
தற்போது புதிதாக Send Flies 2 என்ற தளம் அறிமுகமாகி உள்ளது.
அதன் பெயரை படித்தவுடனேயே அதன் செயல்பாட்டை புரிந்து கொண்டு விடலாம். ஆம்,கோப்புகளை பெற இந்த தளம் உதவுகிறது.
மற்ற கோப்பு பரிமாற்ற தளங்கள் கோப்புகளை அனுப்பி வைக்க உதவுகின்றன என்றால், இந்த தளம் பிரதானமாக மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற வழி செய்கிறது.
யாரிடமிருந்தாவது உங்களுக்கு கோப்பு தேவை என்று வைத்து கொள்ளுங்களேன். அப்போது இதில் நுழைந்து கோப்பை பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டு, அதற்கான இணைய முகவரியை பெற்று கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த இணைய முகவரியை மின்னஞ்சல் மூலம் யாரிடம் இருந்து கோப்பு தேவையோ அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனை பெறுபவர் அந்த இணைய பக்கத்தில் கோப்பை பதிவேற்றினால் மின்னஞ்சல் மூலம் தகவலோடு அந்த பக்கம் வந்து சேர்கிறது.
கோப்புகளை பதிவேற்றும் இணையதளங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட சேவை தான். மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை பெற சிறந்த வழியாகவும் உள்ளது.
மேலும் உங்களது மின்னஞ்சலை பதிவு செய்தால், இந்த தளம் குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment