Sunday, July 22, 2012

பிரான்சே இல் கட்டுப்பாடுகள் உண்டு என்பதற்கு இது உதாரணம்!!மீறியவர்கள் நியாயம் கதைப்பது சுதந்திரமாம்!??


நாடாளுமன்றத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்த பெண் அமைச்சரால் பரபரப்பு


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் அமைச்சர் செசிலி டியூப்ளாட்(வயது 37), நாடாளுன்றத்திற்கு கவர்ச்சியான உடையை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செசிலி டியூப்ளாட் கவர்ச்சியான உடைகளை அணிவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு, முழங்கால் தெரியும் அளவிற்கு உடை அணிந்து வந்தார்.
இது தவிர மிகவும் உயரமான ஹை கீல்ஸ்(High Heels) செருப்பு அணிந்து வந்தார். இது அமைச்சர்களின் உடை கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது.
இந்நிலையில் அவர் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து “ஓ” வென கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் செசிலிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. எனவே தனது பேச்சை நிறுத்தி விட்டார்.
இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், நான் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வருகிறேன். இதுபோன்ற அவமானத்தை நான் வேறு எங்கும் சந்தித்ததில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தங்கள் மனைவிமார்களை இதுபோன்று அவமதிப்பார்களா? என்று கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கேபினட் மந்திரி சபை கூட்டத்துக்கு இவர் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்த போது, முன்னாள் ஜனாதிபதி சர்கோசியின் பாப்புலர் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment