Sunday, July 22, 2012

ஜேர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிப்பு !!



ஜேர்மனியில் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அரசியல் உரிமை நீதிமன்றத்தின் துணைத் தலைவர் ஃபெர்டினாண்ட் கிர்க் லோஃப் கூறுகையில், ஜேர்மனியில் இனிமேல் அகதிகளுக்கும், வேலையில்லா இளைஞர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 364 யூரோ வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் வழங்கி வந்த தொகையான 220 யூரோ, தற்போது 364 யூரோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டில் உதவித் தொகை பெற்ற வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை மொத்தம் 130,000 பேர் ஆகும். தற்போது இதில் புகலிடம் நாடி வந்தவர்களும் சேர்கின்றனர்.
இவர்கள் பெற்று வந்த 220 யூரோ அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாது என்று நார்த் ரைன்-வெஸ்ட்ஃபோலியா மாகாணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதன் காரணமாகவே தற்போது உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment