Sunday, July 22, 2012

இன்று மக்கள் கலைஞர் தென்னகத்து ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் அவர்களின் 13 ஆவது நினைவு தினம்.




இன்று மக்கள் கலைஞர் 
தென்னகத்து ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் அவர்களின் 13 ஆவது நினைவு தினம்.




சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் படித்த ஜெய்சங்கர் அந்தக்கல்லூரிக்கு தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து விடுதி மாணவர்கள் சாப்பிடும் உணவுக்கூடத்தை, தன் சொந்த செலவில் கட்டிக்கொடுத்துள்ளர். தன் பெயரை விளம்பரப்படுத்தப்படக்கூடாது என்று அவர் கூறியதையும் மீறி கல்வெட்டு ஒன்றை அமைத்து அதில் அவரது பெயரை இடம் பெறச்செய்துள்ளனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

வேறொரு சமயத்தில் புதுக்கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவுக்கு தலைமை தாங்க வந்த பிரதமர் இந்திராகாந்தி கல்லூரியை சுற்றி பார்க்கும் போது இந்த கட்டிடத்தை இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் இன்றைய பிரபல திரைப்படக் கலைஞருமான ஜெய்சங்கர்தான் கட்டிக்கொடுத்தார் என்று அறிமுகம் செய்துள்ளனர்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பிரதமர் இந்திராகாந்தி "Very Good, You have done a wonderful job" என்று பாராட்டினாராம்.

 ஜெய்சங்கர் சினிமாதுறையில் நான் மதிக்கும் முக்கியமான நபர் என்று பலமுறை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் . 

அத்தகைய ரஜினிகாந்த் ஜெய்சங்கர் இறந்த போது நேரில் சென்று பார்க்கவில்லை.

ஏன் என்று இது பற்றி ரஜினியிடம் கேட்ட போது "ஜெய்சங்கரின் இறந்த உடலை பார்த்து அந்த பிம்பம் கடைசியாக எனக்குள் பதியவிரும்பவில்லை. ஜெய்யின் ஒளி பொறுந்திய அந்த கண்களும் கள்ளம்கபடமற்ற அந்த சிரிப்பு மட்டுமே எனக்குள் கடைசிவரை இருக்க வேண்டும் அதனால்தான் நேரில் சென்று பார்க்கவில்லை" என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
 —

No comments:

Post a Comment