Saturday, June 16, 2012

எதிரி நாடாக இருந்தாலும் இப்படியா செய்வது?




[ வெள்ளிக்கிழமை, 15 யூன் 2012, 01:02.42 மு.ப GMT ]
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் கிரிக்கெட்டை மிஞ்சும் வகையில் பல வினோத நிகழ்வுகள் நடக்கின்றன.
ஜேர்மனி, நெதர்லாந்து அணிகள் மோதிய லீக் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த இரு அணிகளும் எதிரும், புதிருமானவை.

இதனிடையே போட்டியை காண ஜேர்மனி மீடியா வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் கார்கிவ் விமான நிலையம் வந்தனர்.

அங்கு இரண்டு நெதர்லாந்து விமானங்கள் நின்று கொண்டிருந்தன. இவர்கள் வந்த விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வசதி இல்லை.

நெதர்லாந்து விமானிகளிடம் கேட்டதற்கு, அப்படியெல்லாம் கேட்டவுடன் தர முடியாது என பதிலளித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி சுமார் 20 நிமிடங்கள், வெப்பமான விமானத்திலேயே காத்திருந்தனர்.

பின் விமான நிலைய ஊழியர் ஒருவர் மாற்று ஏற்பாடு செய்து தர போட்டியை காண மைதானம் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜேர்மன் விமானி கூறுகையில், விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டுகளை தர மறுத்து இரு நெதர்லாந்து விமானிகள் எங்களை வைத்து விளையாடினர் என்றார்.

No comments:

Post a Comment