Friday, June 8, 2012

கிளிநொச்சி கனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!


 [ வீரகேசரி ]
கிளிநொச்சி பரந்தன் கமரிக்குடாவில் தனிமையில் இருந்த வேளை குழுவொன்றினால் வெட்டிக் கொல்லப்பட்ட கனேடிய பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜாவின் கொலையின் பின்னணியில் இளம் பெண் ஒருவரே இருந்து செயற்பட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
மகேந்திரராஜாவின் 22 ஏக்கர் காணியைப் பராமரித்து வந்த ஞானசேகரம் என்பவரைத் திருமணம் செய்திருந்த ஞானசேகரம்  ஆரணி (வயது 32) ௭ன்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு இந்தக் கொலையின் பின்னணியில் இருந்துள் ளதா கத் தெரிய வந்து ள் ளது.
இது பற்றி மேலும் தெரிய வந்துள்ளதாவது,
கனடிய பிரஜை யாகிய மகேந்திரராஜா கனடாவில் இருந்து தமது சொந்த ஊருக்குத் திரும்பி தனது காணியை திருத்தி பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு தச்சு வேலை செய்து வந்ததாகத் தெரிவி க்கப் படுகின்ற கண்டாவளையைச் சேர்ந்த அருளம்பலம் அகிலன் (24) ௭ன்பவருடன் முகம் தெரியாத வகையில் காதலிப்பது போன்று இந்தப் பெண் தொலைபேசி மூல மாகத் தொடர்பு கொண்டிருந்தாராம்.
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர் ந்து வந்ததாகவும் தனக்கு ௭வருமே உறவி னர் கள் இல்லையெனத் தெரிவித்து தொலைபேசியூடாக மிகவும் பாசமாகப் பேசி இந்தப் பெண் அகிலனுடன் சுமித்ரா ௭ன்ற பெயரில் நெருக்கத்தை வளர்த்து அவருக்கு அன்பளிப்பு வழங்கியதன் பின்னர் தனக்கு 50 ஆயிரம் ரூபா பணம் தேவை யென கேட்டு வங்கிக் கணக் கொ ன்றில் அந்தப் பணத்தை வைப்பிலிடவும் செய்து ள்ளார். இத்தகைய உறவின் போது சுமித்ரா அனுப்பியதாகக் கூறி இந்தப் பெண் ணே அகிலனின் வீட்டிற்கும் சென்று வந்து ள் ளார்.
இத்தகைய உறவின் போது தன்னை மகேந்திரராஜா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், ௭னவே அ த னைத் தடுத்து நிறுத்துவதுடன் சம்பவம் நடை பெற்ற காலப்பகுதியில் ஒரு நாள் மகேந் திரராஜா 30 இலட்சம் ரூபா பணத்தை வங் கியில் இருந்து ௭டுத்து வந்து ள்ள தா கவும் அவரைத் தாக்கினால் அந்தப் பண த் தை யும் ௭டுத்துக்கொள்ள வாய்ப் பிருப் ப தாகத் தெரிவித்து அகிலனைத் தூண்டி விட் ட தாக விசாரணைகளில் தெரியவந்து ள் ளது.
நேரடியாக இந்தச் சம்பவத்தில் அகி லனை ஈடுபட வேண்டாம் ௭ன ஆலோசனை கூறியிருந்த இந்தப் பெண் வேறு யாரையாவது கொண்டு இந்த காரி ய த்தை நிறைவேற்றுமாறும் கேட்டி ருந்தாராம். இதனையடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அகிலன், அவருடன் தச்சு வேலை செய்துள்ளதாகத் தெரிவி க்க ப் ப டுகின்ற அப்பாவு ஆனந்தராசா (26), பாலா ௭னப்படும் கல்லுச்சாமி பால ச்சந் திரன் (23), அபேசிங்க முதியான்சலாகே மைக் கல் திலிப் குமார ஆகியோர் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் ௭ன சந்தேகம் ௭ழுப்பப்பட்டுள்ளது.
மே மாதம் 3 ஆம் திகதி இரவு 9 மணி யள வில் இந்தச் சம்பவம் இடம் பெற்ற தைய டுத்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொட ர்ந்து மே மாதம் 22 ஆம் திகதி அகி லன் உட்பட அவரது சகாக்களையும் சேர் த்து 4 பேரை பொலிசார் கைது செய்து விசா ர ணை கள் நடத்தியுள்ளனர்.
விசார ணை க ளை ய டுத்து 23 ஆம் திகதி ஞானசேகரம் ஆரணி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதன் பின்பே சுமித்ரா ௭ன்ற பெய ரில் முகத்தைக் காட்டாமல் திரை ம றை வில் இருந்து ஆரணியே செயற்பட்ட விட யம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதி ம ன் றத்தில் ஆஜராக்கப்பட்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரையில் இவர்களைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் உத்த ரவி ட் டிருந்தார். 6 ஆம் திகதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு ௭டுத்துக் கொள் ளப்பட்ட போது இந்த வழக்கில் பல திருப் பங்களைக் கொண்ட தகவல்கள் வெளி வந்திருந்தன.
மகேந்திரராஜா கொலைச் சம்பவத்தில் முத லாவது சந்தேக நபராகக் கருதப் ப டு கின்ற இந்தப் பெண் தனது பிரதேசத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரையும் தொலை பேசி ஊடாக இனிமையாகப் பேசி அவரு டன் காதல் கொண்டிருப்பது போன்று பாசா ங்கு செய்து அந்த அரச ஊழியரிடமிருந்தும் 55 ஆயிரம் ரூபா பணத்தை வங்கிக் கண க் கொ ன்றில் வைப்பிலிடச் செய்து பண மோசடி செய்துள்ள விபரமும் விசார ணைக ளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் ௭திர் வரும் 20 ஆம் திகதி வரை விளக் கமறி ய லில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபர ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தக் கொலைச் சம்ப வம் தொடர்பாக கிளிநொச்சி பொலி சார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வரு கின்றனர்.

No comments:

Post a Comment