Saturday, June 2, 2012

அமெரிக்க தேசிய உச்சரிப்பு போட்டியில் வாகை சூடிய இந்தியச் சிறுமி!



அமெரிக்காவில் வருடந்தோரும் நடைபெற்று வரும் போட்டியான தேசிய சொற்கள் உச்சரிப்பு போட்டியில்(Scripps National Spelling Bee)

 14 வயதுடைய சினிக்தா நந்திபதி (Snigdha Nandipati) எனும் சிறுமி வெற்றி பெற்றார்.

 வாஷிங்கடனில் நடைப்பெற்ற 85வது தேசிய சொற்கள் உச்சரிப்பு போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் 278 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்ற வியாழக்கிழமை நடந்த அரை இறுதிச் சுற்றில் 10 முதல் 14 வயதுடைய 50 சிறார்கள் இறுதிப் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அமெரிக்கா, சான் டியாகோவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சினிக்தா 'guetapens' எனும் பிரஞ்சு மொழி சொல்லை சரியாக உச்சரித்ததன் மூலம் 2012 இற்கான தேசிய உச்சரிப்பு போட்டியின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

 முதல் நிலை வெற்றியாளரான சினிக்தாவுக்கு 30,000 அமெரிக்க டாலர் பரித்தொகையும், வெற்றிக்கோப்பையும் பரிசுகளாக கிடைத்தன. இதைவிட 2,500 டாலர் சேமிப்பு பத்திரமும் 5,000 டாலர் உபகாரச் சம்பளமும் கூட கிடைத்தன. இறுதிச் சுற்றில் சாம்பியனாதைப் பற்றி கேட்டபோது "இதுவோரு அற்புதம்' என வர்ணித்ததோடு தனக்கு பரிசாக கிடைத்த 30,000டாலரை தன் கல்லூரி படிப்புக்காக சேமித்து வைக்கப்போவதாவும் தெரிவித்தார்.

 இதேபோல் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 14வயதுடைய ஸ்ருதி மிஷ்ரா, மற்றும் 12 வயது அர்விந்த் மஹன்கலி ஆகியோரும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றால் நிலை வெற்றியாளர்களாக தெர்ந்தெடுக்கப்பட்டனர்.

 என்சைக்ளோபீடியாவை போழுதுபோக்குக்காக வாசித்து வரும் பழக்கம் கொண்டவரான சினிக்தா மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே இப் போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளார். தேசிய சொற்கள் உச்சரிப்பு இறுதிப்போட்டியை நேரில் காண்பதற்காக இந்தியாவிலிருந்து சினிக்தாவின் தாத்தாவும் பாட்டியும் கூட வந்திருந்தனர். சினிக்தா நந்திபதி இப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து சினிக்தாவின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

 

சென்ற ஆண்டு போட்டியில் கூட 14 வயதான சுகன்யா ராய் எனும் இந்திய வம்சாவளிச் சிறுமி வெற்றிபெற்றிருந்தார். இவ்வாறு தொடர்ந்து இந்திய சிறார்கள் 5 தடவை இப்போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.




http://www.manithan.com/news/20120602102897

No comments:

Post a Comment