Saturday, May 26, 2012

தர்மபுரத்தில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் - மருத்துவர் விஜிதரன்!



கிளிநொச்சி தருமபுரம் மருத்துமனையின் மருத்துவர் விஜிதரன் மருத்துவமனை மருந்துகளை கையப்படுத்தி தனது தனிப்பட்ட மருத்துவமனையில் கருத்தடை ஊசிமருந்தினை ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

வடமாகாண ஆளுனர் சந்திர சிறீயினால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைக்கு நியமிக்கப்பட்ட மருத்து அதிகாரியான கார்த்திகேயன் என்வரின் சிபாரசில் தர்மபுரம் மருத்துவமனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்தான் விஜிதரன்,இவர்கள் இருவரும் ரஷ்யாவில் மருத்து கல்வியினை கற்றுவிட்டு சந்திரசிறியின் சிபார்சிற்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக தருமபுரம் மருத்து மனையில் நாள்தோறும் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்குஉரிய மருந்து பொருட்களை மருத்துவர் விஜிதரன் தனது சொந்த மருத்துவமனைகளான விசுவமடு,தர்மபுரம் பகுதிகளில் இயங்கும் தனது மருந்து கடைக்கு எடுத்துசெல்வதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவரிற்கு உடந்தையாக இவரின் உதவியாட்களான ஜெக்குமார், வனிதா,சுதர்சன் நாகலோஜினி,(செல்வி)இவர்கள் இருந்துவருகின்றார்கள்,அரச மருத்துவமனையில் கருத்தடை மருந்து ஏற்ற தடைவிதிக்கப்பட்ட போதும் இவர் தனது தனியான மருத்துவமனையில் 450 ரூபாவிற்கு கருத்தடை ஊசியினை ஏற்றிவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் தருமபுரம் மருத்துவமனையில் தொண்டராக பணியாற்றிய ரவீந்திரன் ரஞ்சினி என்பவர் மீது மருத்துவர்; பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் மருத்துவருடன் முரண்பட்ட ரஞ்சினி நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்த்து கதைத்தவேளை தொண்டர் பணியில் இருந்து நீக்கியுள்ளார் இவ்வாறு தர்மபுரம் மருத்துவமனைக்கு சொந்தமான நோயாளர்; காவுவண்டியினை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்துவதும்,மருத்துவமனை செல்லும் நோயாளா;களை மருந்து இல்லை என்று சொல்லி தனது தனிப்பட்ட மருத்துவமனைக்கு சொல்லுமாறு துண்டு எழுதிக்கொடுப்பதுமாக மக்கள் சேவையில் இருந்து முற்றாக மாறுபட்ட செயற்பாட்டில் மருத்துவர் விஜிதரன் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களுக்கு அவரின் உதவியாட்கள் இருவரும் தொலைபேசியூடாக மருத்துவரை தொடர்புகொண்டு மருந்து வழங்கும் நிகழ்வும் நடந்துள்ளதாகவும்,ஜக்குமார், வனிதா,சுதா;சன் நாகலோஜினி,(செல்வி)ஆகிய உதவியாளர்கள் இருவரின் சொல்லினை கேட்ட மருத்துவர் தனது மருத்துவ பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக தனது விசுவமடு மற்றும் தர்மபுரத்தில் இயங்கும் பாமசியில் தனிப்பட்ட ரீதியில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் மக்கள் விசனம்அடைந்துள்ளார்கள்.

இதேவேளை தர்மபுரம் மருத்துவர் விஜி தரனின் இந்த செயற்பாட்டினை தட்டிக்கேட்ட மக்கள் தலைவர்களை நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் நாங்கள்எடுப்பதுதான் முடிவு என்று சந்திரசிறியின் செல்வாக்கில் எங்களால் என்னவும் செய்யமுடியும் என்று விரட்டியுள்ளார்கள்.

தர்மபுரம் மருத்துவரின் செயற்பாட்டினால் நாள்தோறும் விபத்திற்கு உள்ளாகும் மற்றும் காயத்திற்கு உள்ளாகிவருபவர்கள் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத காரணத்தால் கிளிநொச்சிமருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலைதெரிவித்துள்ளார்கள்.

மக்களுக்கு சேவையாற்றுவதாக உறுதிஎடுத்து கொண்டு தமிழர் தாயகத்தில் புதிதாக நியமனம் பெற்ற இந்த மருத்துவர்கள் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் தங்கள் தனிப்பட்டரீதியிலான வருமானம் தேடிக்கொள்ளும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment