Sunday, May 20, 2012

விவசாயி கண்டுபிடித்த காற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனிய​ல் கார்


[ Sunday, 20 May 2012, 06:04.22 AM. ]
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கக்கூடிய இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
55 வயதை உடைய தான்ங் செயின்பிங் என்ற குறித்த விவசாயி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இக்காரின் மூலம் எரிபொருட் செலவு குறைக்கப்படுவதுடன் சுற்றுச் சூழலிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நபரே அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காரிற்காக மூன்று மாதங்கள் கடுமையான உழைப்பை மேற்கொண்ட அவர் அண்ணளவாக 1,000 யூரோக்களைச் செலவிட்டுள்ளார். இவைத் தவிர இந்தக் காரானது மணிக்கு 70 மைல் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment